டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... தண்ணீரை வீணாக்கினால் ரூ.2 ஆயிரம் அபராதம்; அரசு அறிவிப்பு!

டெல்லியில் குடிநீருக்கு அல்லாடும் மக்கள்
டெல்லியில் குடிநீருக்கு அல்லாடும் மக்கள்
Updated on
2 min read

டெல்லியில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவு வருகிறது. ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத்து விட்டதே இதற்கான காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

டெல்லியில் கடும் குடிநீர் பஞ்சம்
டெல்லியில் கடும் குடிநீர் பஞ்சம்

டெல்லியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் குடிநீரை வீணாக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடிநீரை வீணாக்கினால் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அதிஷி
அமைச்சர் அதிஷி

கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல், போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான குடிநீர் கொஞ்சம் ஏற்பட்டு, இதே போன்ற அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in