தொடர் விடுமுறை... 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

அரசு விரைவு பேருந்துகள்
அரசு விரைவு பேருந்துகள்
Updated on
1 min read

சுதந்திர தின விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தின விழாவை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வார இறுதி நாட்கள், சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 11, 12, 13, 15, ஆகிய தேதிகளில் 1,100 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், கோவை போன்ற இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் பெங்களூருவிலிருந்து பல இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in