அரசு மருத்துவமனையில் அவலம்: ஸ்ட்ரெச்சர் தராததால் தாயை தூக்கிச் சென்ற மகள்!

ஈரோடு அரசு மருத்துவமனையில் மூதாட்டியை தூக்கிச் செல்லும் அவரது மகள்
ஈரோடு அரசு மருத்துவமனையில் மூதாட்டியை தூக்கிச் செல்லும் அவரது மகள்
Updated on
1 min read

ஈரோடு அரசு மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் வழங்க மறுத்ததால், சிகிச்சைக்கு அழைத்துசென்ற மூதாட்டியை அவரது மகளே தனி ஆளாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.

ஈரோடு அருகே பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சொர்ணா. இவர் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார்.

தாயை மீட்ட அவரது மகள் வளர்மதி, அவரை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

இந்நிலையில் நடக்க இயலாமல் இருந்த மூதாட்டி சொர்ணாவை, மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல, மருத்துவமனை ஊழியர்கள் தரப்பிலிருந்து ஸ்ட்ரெச்சர் வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியை மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல இயலாமல் வளர்மதி தவித்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து வேறு வழியின்றி, வளர்மதி தனது தாயை தனி ஆளாக, தூக்கிச் சென்று, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்.

மூதாட்டியை அவரது மகள் மருத்துவமனை வளாகத்துக்குள் தூக்கிச் சென்ற சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

ஸ்ட்ரெச்சர் இல்லாததால் தாயை தூக்கிச் செல்லும் பெண்
ஸ்ட்ரெச்சர் இல்லாததால் தாயை தூக்கிச் செல்லும் பெண்

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சுகாதார துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in