
இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தனது குடும்பத்துடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் இன்று ஆடிக்கிருத்திகை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருத்தணி முருகனை தரிசனம் செய்ய திருத்தணி கோவிலுக்கு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தனது குடும்பத்துடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.