
அரபிக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி வருவதை வானிலை ஆய்வு மையம் தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் எனவும், வரும் 22ம் தேதி தீவிர புயலாக உருவெடுக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு ’தேஜ்’ என்று இந்தியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும்.
இந்த புயலால் மும்பை உள்ளிட்ட கடற்கரையோர நகரங்கள் கடும் சேதத்தை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேஜ் புயல் காரணமாக, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!