எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், நாட்டை காக்கும் ராணுவ வீரர்களும் எல்லையில் மத்தாப்பு கொளுத்தி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 76-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், பணிக்கு இடையே பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டுப்பற்று பாடல்களுக்கு அவர்கள் நடனம் ஆடினர். வீட்டை விட்டு வெளியில் வெகுதூரம் இருந்தாலும், அனைவரும் ஒரு குடும்பம் போன்று தீபாவளி கொண்டாடுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்தும், சக வீரர்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in