வாக்கு எண்ணிக்கை பணி: ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்கும் நிலையில், திமுக வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

மக்களவைத் தேர்தல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 4ம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு வெளியாகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் அக்கட்சி வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன், அண்ணா அறிவாலயத்தில் இருந்தவாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்தும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், வாக்கு எண்ணிக்கை பணியின்போது, மையத்தில் திமுக முகவர்கள் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய முகவர்களுக்கான பயிற்சி போன்றவை இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எத்தனை மணிக்கு செல்ல வேண்டும், அங்கு கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகள், தபால் வாக்குகள் எண்ண துவங்கியதிலிருந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அனைத்து சுற்றுகளும் எண்ணி முடிக்கும் வரை மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

திமுக நிர்வாகிகள் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம்
திமுக நிர்வாகிகள் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம்

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் திமுகவினருக்கு இந்த ஆலோசனைக்கூட்டம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பிரச்னைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியாக அணுகுவது குறித்து சட்டத்துறை பிரிவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் திமுக நிர்வாகிகளுக்கு காணொலி மூலம் ஆலோசனைகளை வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in