கேரளாவில் வெற்றிப் பாதையில் காங்கிரஸ் கூட்டணி... 20 தொகுதிகளில் 19-ல் முன்னிலை!

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

கேரளாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

கேரளாவில் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 20 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் 71.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் மொத்தமுள்ள 2,77,49,158 வாக்காளர்களில் 1,97,77,478 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்திய அளவில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கேரளாவில் தனித்துப் போட்டியிட்டன.

மார்க்சிஸ்டூ, காங்கிரஸ்
மார்க்சிஸ்டூ, காங்கிரஸ்

கடந்த மக்களவைத் தேர்தலில்( 2019) யூடிஎஃப் 19 இடங்களையும், எல்டிஎஃப் ஆலப்புழாவில் ஒரு இடத்தையும் கைப்பற்றியது. இந்த முறை எல்டிஎஃப் சார்பில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட்சி 4 இடங்களிலும், கேரள காங்கிரஸ்(எம்) கேசி(எம்) ஃ தொகுதியிலும் போட்டியிட்டன.

ஐக்கிய ஜனநாயக முன்னணி(டியூடிஃப்) சார்பில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) 2 இடங்களிலும், கேரள காங்கிரஸ் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. இதே போல தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பாஜக 16 இடங்களிலும், பாரத் தர்ம ஜன சேனா 4 இடங்களிலும் போட்டியிட்டன.

திருவனந்தபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி சசி தரூர் (காங்கிரஸ்), பன்னியன் ரவீந்திரன் (இ.கம்யூனிஸ்ட்) ஆகியோரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தியுள்ளது. வயநாட்டில், தற்போதைய எம்.பி ராகுல் காந்தி (காங்கிரஸ்) ஆனி ராஜா (இ.கம்யூனிஸ்ட்) மற்றும் பாஜக கேரள மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மோடி மற்றும் ராகுல்
மோடி மற்றும் ராகுல்

கேரளாவில் மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு பலமுறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் 19 பேர் முன்னிலையில் உள்ளனர். இதனால் அந்த கூட்டணியில் வெற்றிக் களிப்பில் உள்ளனர்‘.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in