இயக்குநர் பாலா கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!

நடிகர் பாலா
நடிகர் பாலா

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், மலையாள நடிகை ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாலாவின் போலி இன்ஸ்டா கணக்கு
பாலாவின் போலி இன்ஸ்டா கணக்கு

இந்நிலையில், இயக்குனர் பாலா பெயரில் இன்ஸ்ட்ராகிராம் சமூக வலைத்தளத்தில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலா கொடுத்த புகார்
பாலா கொடுத்த புகார்

மேலும், இது தொடர்பாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பாலா, விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in