
இலங்கை கடற்படை கைது செய்துள்ள 27 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த அக்டோபர் 14ம் தேதி 400க்கும் மேற்பட்ட மீனவர்கள், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். ஆழ்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை, 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 4 படகுகளை தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு அழைத்து சென்று இலங்கை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான பிரச்சினையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 27 இந்திய மீனவர்கள், 2 வெவ்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு இருப்பதோடு, 4 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த கைது மற்றும் பறிமுதல் சம்பவங்கள் கடலோர மீனவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொடரும் இந்த கைதுகளால் மீனை உணவாக கொண்ட மக்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே இவர்களின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி, மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 13ம் தேதி, 17 மீனவர்கள் மற்றும் 3 படகுகளை இலங்கை கடற்படை சிறைப்பிடித்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால், கடந்த அக்டோபர் 14ம் தேதி அனைவரும் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினர். அதே நாளில் இந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!