பிரதமரின் வாக்குறுதிகளுக்கு கியாரண்டி, வாரண்டி எதுவும் கிடையாது... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு வாரண்டியோ, கியாரண்டியோ கிடையாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்
பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில், தென்காசி திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் ஆகியோரை ஆதரித்து பேசிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், "சமூக நீதிக்கு பாஜகவால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீடுக்குத் தீங்கு இழைக்கும் கட்சி பாஜக. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வரும்போது, அதற்கு பாஜக மறுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி பெரும்பான்மை மக்களுக்கும் பாஜக எதிரிதான். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய ஊழலை பாஜக செய்துள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே கூறுகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது பாஜக அரசு. நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்கவே இந்தியா கூட்டணியை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும், தமிழனுக்கும் துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி. தேர்தல் வந்ததும், பெட்ரோல் , டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்கிறார் பிரதமர். மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டி, வாரண்டி எதுவும் கிடையாது. ஆட்சியில் 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாத மோடி சேல்ஸ்மேன் மாதிரி விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தேர்தல் வரும்போது மட்டும் மக்கள் மீது கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம் கொண்டவர் மோடி. தேர்தலுக்காக விலைக்குறைப்பு செய்வது பச்சோந்தித் தனம் இல்லையா?. 410 ரூபாய்க்கு விற்ற சமையல் காஸ் சிலிண்டர் விலையை 1000 ரூபாய்க்கு மேல் உயர்த்தியது தான் உங்கள் சாதனை. விலை குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம். பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதை பாஜக அரசால் தடுக்க முடியவில்லை. சீன பட்டாசுகளால் சிவகாசியில் ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சரிந்த பட்டாசு தொழிலை சரிசெய்ய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in