நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்... சட்டப்பேரவையில் முதல்வர் தனித்தீர்மானம்

நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்... சட்டப்பேரவையில் முதல்வர் தனித்தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை அதனை திரும்ப அனுப்பியது. இதையடுத்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனால் 2022ம் ஆண்டு 3வது முறையாக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, இதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், ’நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகி விட்டது. நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் எதிர்ப்பு குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் துவங்கியுள்ளது’

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

’மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீட்விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை கைவிடும் வகையில், மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சரின் இந்த தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேரும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in