அரசு பள்ளியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த 9-ம் வகுப்பு மாணவன்... மாரடைப்பு காரணமா?

உயிரிழந்த மாணவன் தனு.
உயிரிழந்த மாணவன் தனு.
Updated on
1 min read

தும்கூரில் விளையாடிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சமீப காலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு இளவயது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் மாரடைப்பால் மரணடைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு
மாரடைப்பு

தங்களுக்குப் பிடித்த செயலில் ஆர்வமில்லாமல் இருப்பது, எரிச்சல், அமைதியின்மை போன்றவை மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களாகும். இது மாரடைப்பின் அறிகுறிகளாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

அப்படியொரு சம்பவம் கர்நாடகா மாநிலம், தும்கூரில் நேற்று நடைபெற்றுள்ளது. தும்கூரில் உள்ள சிறிவாரா அரசு மேல்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனு(14). இவர் பள்ளியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தார். அவர் திடீரென சுருண்டு விழுந்தார்.

தும்கூர்
தும்கூர்

அப்போது அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆசிரியர்கள், உடனடியாக தனுவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மருத்துவமனைக்கு தனுவை கொண்டு சென்றனர். ஆனால், அவர் அதற்குள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை தனுவின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. 14 வயது மாணவன் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஹெப்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பு காரணமாக தனு இறந்தாரா என போலீஸார் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in