
“அவசரமாக ஆண் காதலன் தேவை” என அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்அப்... ட்ராப்... எஸ்கேப்... என்பது தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. பழகிய உடனேயே டேட்டிங் சென்று, அடுத்த நாள் விபரீத முடிவுகளை எடுக்கும் நிலைதான் தற்போது நிலவுகிறது. சில இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல பாய்பிரண்ட், நல்ல கேர்ள் பிரண்ட் கிடைக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. பல இளைஞர்கள், இளம்பெண்கள் டேட்டிங் என்பது குறிப்பிட்ட தேதி மற்றும் பொது இடத்தில் ஒருவர் தனக்கு ஏற்ற துணையை தானே பொருத்தம் பார்த்து தேர்வு செய்வதற்கான ஒரு விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் டேட்டிங்கிற்கான வரைமுறை பல்வேறு நாடுகளுக்கு இடையே சிற்சில வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.
அந்த வகையில் நியூயார்க்கை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், கிரெய்க்ஸ் லிஸ்ட் என்ற அமெரிக்க நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பக்கத்தில் “ஆண் காதலன் தேவை” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கிரெய்க்ஸ் லிஸ்ட் என்பது வேலை, வீடு தேடுவோருக்கான விளம்பர இணையதளமாகும்.
இந்த இணையதள பக்கத்தில், அவர் வெள்ளியிட்டுள்ள பதிவில், ஹூஸ்டனின் புறநகர்ப் பகுதியான TX, Angletonல் எனக்கு ஒரு அழகான, விசாலமான 5 படுக்கையறை வீடு உள்ளது. என்னுடன் வாழ்வதற்கு ஒரு ஆண் காதலன் அல்லது அறைத்தோழன் வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். குற்றப் பின்னணி எதுவும் இருக்கக்கூடாது. பூனைகளை நேசிக்க வேண்டும். நான் ஒரு தடகள வீரர் என்பதால் பார்ப்பதற்கு மிகவும் மோசமாகத் தோன்றவில்லை.
என் எடையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் நல்ல நிறமாக இருப்பேன். எனக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்று விட்டேன். எனக்கு 13 மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் அவரது தந்தையுடன் உள்ளனர். தற்போது நான் தனிமையில் இருக்கிறேன். விவாகரத்திற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை. மேலும், எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூத ரத்தம் உள்ளவர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் நான் கிறிஸ்தவ ஆண் நண்பரோ அல்லது காதலரோ தேவை என நினைக்கிறேன்" என கூறியுள்ளார். ஜூலை 6ம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.