
நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தாயார் லீலாவதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தாயார் லீலாவதி வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உதயசந்திரனின் தாயார் லீலாவதி உயிரிழந்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமசை்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., அவர்களின் அன்னையார் திருமதி. லீலாவதி அவர்கள், உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரது மறைவால் வாடும் திரு.உதயச்சந்திரன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.