உலகின் முதல் 3டி பிரிண்டட் ராக்கெட் எஞ்சின் அறிமுகம்... சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை!

அக்னிகுல்
அக்னிகுல்
Updated on
2 min read

சென்னை பின்னணியிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, உலகின் முதல் 3டி பிரிண்டட் ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது

விண்வெளியில் அசாத்திய பாய்ச்சல் கண்டு வருகிறது இந்தியா. இஸ்ரோ நிறுவனம் முன்னெடுக்கும் அடி ஒவ்வொன்றும் வல்லரசு தேசங்களை வாயடைக்கச் செய்து வருகின்றன. வளர்ந்த தேசங்களின் விண்வெளி சாதனைகளை தாண்டி வருவதோடு, அவற்றின் செலவில் பல மடங்கு குறைவான பட்ஜெட்டில் இஸ்ரோ தனது சாதனைகளை தடம் பதித்து வருகிறது. இந்தியாவின் வளரும் விண்வெளி ஆய்வுக்கான வாசலை அகலத் திறக்கும் முயற்சியில், தனியாருக்கும் வாய்ப்புகள் தரப்பட்டு வருகின்றன.

இஸ்ரோ
இஸ்ரோ

அந்த வரிசையில் ராக்கெட் தயாரிப்புகள் முதல் செயற்கைக்கோள் வடிவமைப்பு வரை, இளைஞர்கள் பலரும் தங்களது ஸ்டார்ட் அப் பாய்ச்சல்களில் இணைந்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், இன்றைய தினம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அக்னிபான் சப்ஆர்பிட்டல் டெக்னாலஜிகல் டெமான்ஸ்ட்ரேட்டர்(எஸ்ஓஆர்டிஇடி) ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சப்-ஆர்பிட்டல் டெக்னாலஜிகல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்பது செமி-கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் இயங்கும் சிங்கிள்-ஸ்டேஜ் ராக்கெட் ஆகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த வாகனம் ஐஐடி மெட்ராஸில் உள்ள அக்னிகுலின் வசதிகளில் அசெம்பிள் செய்யப்பட்டதாக தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

அக்னிபான் ராக்கெட் 300 கிலோ எடையை 700 கிமீ உயரத்திலுள்ள சுற்றுப்பாதைக்கு சுமந்து செல்லும் திறன் கொண்டது. அக்னிகுலின் ராக்கெட் ஏவுதலில் உள்ள சிக்கலானது, ஏவுகணை வாகனமான 'அக்னிபான் எஸ்ஓஆர்டிஇடி' இந்தியாவின் முதல் செமி கிரையோஜெனிக் எஞ்சினைப் பயன்படுத்துவதால் எழுகிறது. இது திரவ மற்றும் எரிவாயு கலவையை உந்துசக்திக்கு பயன்படுத்துகிறது.

விண்ணில் பாய்ந்த அக்னிபான் ராக்கெட்
விண்ணில் பாய்ந்த அக்னிபான் ராக்கெட்

இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி கூறுகையில், “எங்கள் ஸ்டார்ட்அப்களுக்கு வானம் கூட எல்லை இல்லை. மிகவும் புதுமையான வகையில், உலகின் முதல் முறையாக, இன்று அக்னிகுல் மூலம் டீப் கோர் தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அனைத்து இளம் மாணவர்களுக்கும் தைரியமாக தொழில்முனைவு பாதையில் சாதனை பதிக்க இது ஒரு சிறந்த உத்வேகமாகும்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது தனிப்பட்ட செய்தியாக"ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தும் அற்புதமான சாதனை! உலகின் முதல் சிங்கிள் ஒற்றை-துண்டு 3டி பிரிண்டட் செமி கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் இயக்கப்படும் அக்னிபான் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் விண்வெளித் துறைக்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பம் மற்றும் நமது இளைஞர் சக்தியின் அற்புதமான புத்திசாலித்தனத்திற்கு சான்றாகும். அக்னிகுல் கஸ்மோஸ் குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்" என எக்ஸ் தளத்தில் வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்

தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in