ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பு! தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் படுகொலை

கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் படுகொலை
கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் படுகொலை

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் கவுரிநாத் சவுத்ரி, அரசியல் பகைமை காரணமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடையச் செய்து, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி

இந்நிலையில், கர்னூல் மாவட்டம், பொம்மிரெட்டிப்பள்ளி கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான கவுரிநாத் சவுத்ரி, அரசியல் பகைமை காரணமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் கத்தி, கோடாரி ஆகிய ஆயுதங்களால் தாக்கி நேற்று படுகொலை செய்யப்பட்டார்.

ஆந்திர முதல்வராக சந்திராபு நாயுடு விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பமாய்யா, ராமகிருஷ்ணா மற்றும் சிலர் இந்த கொலைக்கு பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

கவுரிநாத் சவுத்ரி அப்பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்து வந்தார். இவரது கொலைக்கு சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒய்.எஸ்.ஜெகன் தோல்வியடைந்தாலும், அவர் ரத்தக்களரி வரலாற்றை தொடர்ந்து எழுதுகிறார். கர்னூல் மாவட்டம், வெல்தூர்த்தி மண்டலம் பொம்மிரெட்டிபள்ளியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் கவுரிநாத் சவுத்ரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டாலும், ஜெகன் ரெட்டி மக்களைக் கொல்கிறார். ஜெகன் ரெட்டி கொலை அரசியலை நிறுத்தாவிட்டால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in