அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கொட்டப் போகிறது மழை... வானிலை மையம் எச்சரிக்கை!

கனமழை
கனமழை
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் பருவமழை தொடங்கவில்லை.

மழை
மழை

தமிழகத்தை பொறுத்தவரை உள்மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மாறாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தற்போது அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்கிறது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசைக்காற்றின் வேறுபாடு காரணமாக இன்று முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in