மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த தடை! யுனெஸ்கோ பரிந்துரை!

மாணவர்கள்
மாணவர்கள் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த தடை! யுனெஸ்கோ பரிந்துரை!

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதை அனைத்து நாடுகளும் தடைச் செய்ய வேண்டும் என்று யுனொஸ்கோ பரிந்துரைந்துள்ளது. செல்போன்களைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுனொஸ்கோ கூறியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமே செல்போன்களின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பல நாடுகள் ஆன்லைன் வகுப்புகளைத் துவங்கியிருந்த நிலையில், செல்போன், லேப்-டாப் என இணைய வழி கல்வி முறைக்கு மாணவர்கள் மாறினார்கள். ஆன்லைன் வகுப்புகள் எனக் கூறி விட்டு, சமூக வலைத்தளங்களிலும் மாணவர்கள் அதிக நேரத்தைச் செலவிட துவங்கியது பெரும் பிரச்சினையாக எழுந்தது. கொரோனா காலத்தில் துவங்கிய வாட்ஸ்-அப் குரூப் நடைமுறைகளை தற்போதும் பல பள்ளிகளில் பின்பற்றி வருகின்றனர். நோட்ஸ், ஹோம்வொர்க் என்று சொல்லிக் கொண்டு, பள்ளி விட்டு வந்ததும், அதிக நேரம் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்தி வருவதாக யுனொஸ்கோ கவலைத் தெரிவித்துள்ளது.

மாணவிகள்
மாணவிகள்’ஒரு மார்க் கேள்வித்தான் கஷ்டமாக இருந்தது; மற்றபடி ஓகே தான்’- தேர்வு எழுதிய பிளஸ்2 மாணவர்கள் மகிழ்ச்சி!

கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆன்லைன் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட்போன்களை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

வகுப்பறைகளில் செல்பொன்களைப் பயன்படுத்துவது, மாணவர்களின் மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது எனக் கூறியுள்ள யுனெஸ்கோ, தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in