பாஜகவில் பரபரப்பு... ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட நபர்கள்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட நபர்கள்.
Updated on
2 min read

தாம்பரம் ரயில் நிலையத்தில் 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேரை நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் வருகிற ஜூன் 1-ம் தேதி 7வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலும், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இதனிடையே ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பணம் கொண்டு செல்வதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது 4 கோடி ரூபாய் பணம் சிக்கியது. இது தொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திய போது, பாஜகவின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு அந்த பணத்தை கொண்டு செல்வதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேசவ விநாயகம்
கேசவ விநாயகம்

வழக்கு விசாரணையின் போது இந்த பணம் தன்னுடையது அல்ல என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதனால் இந்த பணம் பாஜகவிற்குச் சொந்தமான பணம் எனவும் ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிசிஐடி போலீஸார், சம்மன் அனுப்பியிருந்தனர்.

சிபிசிஐடி போலீஸார்
சிபிசிஐடி போலீஸார்

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in