தடைகளை மீறி வேங்கை வயலில் பிரச்சாரம்... நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

வேங்கை வயலில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்
வேங்கை வயலில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

அனுமதியின்றி வேங்கை வயல் கிராமத்தில் பிரச்சாரம் செய்ததாக திருச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022 ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி போலீஸார் வேங்கை வயல் இறையூர் முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.

தேர்தல் புறக்கணிப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவிப்பு
தேர்தல் புறக்கணிப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவிப்பு

இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேள்வி எழுப்பி இருந்தது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் உள்ளது. இதனால், நீதிக்காக காத்திருந்து பொறுமை இழந்த வேங்கைவயல் பொதுமக்கள், இந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, கிராமத்தின் முகப்பில் பேனரும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த கட்சிகளையும் கிராமத்திற்குள் மக்கள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், பல்வேறு கட்டுபாடுகளை மீறி திருச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ், வேங்கை வயல் கிராமத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்திற்கு அனுமதியின்றி வாக்கு சேகரிக்க சென்றதாக, கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார் அளித்த புகாரின் பேரில் நாதக வேட்பாளர் ராஜேஷ் மீது போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in