பானிபூரியில் புற்றுநோய் மூலக்கூறுகள்? - தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு

ராமேஸ்வரத்தில் விற்கப்படும் பானிப்பூரியை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி.
ராமேஸ்வரத்தில் விற்கப்படும் பானிப்பூரியை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி.

பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ரசாயன கலவை சேர்க்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளனர்.

பானிபூரியில் வழங்கப்படும் ரசத்தில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய ரசாயன கலவை சேர்க்கப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதன் காரணமாக, பானிபூரியை விரும்பி உண்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆங்காங்கே உள்ள, பானிபூரி கடைகளில் ஆய்வில் இறங்கியுள்ளனர்.

பானிப்பூரி விற்பனை கடைகளில் ஆய்வு
பானிப்பூரி விற்பனை கடைகளில் ஆய்வு

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பானிபூரி கடைகளில் இன்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதி ஆவணமின்றி பானிபூரி விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரோட்டில் பானிப்பூரி விற்பனை கடைகளில் ஆய்வு
ஈரோட்டில் பானிப்பூரி விற்பனை கடைகளில் ஆய்வு

குறிப்பாக பானிபூரி, ரசம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, தரமற்ற உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. மேலும், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பானிப்பூரி கடைகள் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதபோல், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பானிபூரி விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in