பயங்கரம்... அண்ணியை அபகரிக்க முயற்சி: தட்டிக்கேட்ட அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பி!

கொலை செய்யப்பட்ட பிரசாத்.
கொலை செய்யப்பட்ட பிரசாத்.

அண்ணியை தகாத உறவுக்கு அழைத்த தம்பியை தட்டிக் கேட்ட அண்ணன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சாமராஜநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சாமராஜநகரில் உள்ள சவுடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி தகாத உறவுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தனது மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த தனது தம்பி குமாரை, பிரசாத் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது உன் மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே அடிதடி ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த குமார், கத்தியால் தனது அண்ணன் பிரசாத்தை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இக்கொலை குறித்த தகவல் அறிந்த குண்டலுப்பேட்டை போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அத்துடன் கொலை செய்யப்பட்ட பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது அண்ணனை கொலை செய்த குமாரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in