அதிர்ச்சி... அதிவேகமாக பரவும் டெங்கு... சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழப்பு!

அதிர்ச்சி... அதிவேகமாக பரவும் டெங்கு... சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழப்பு!

சென்னை பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் தமிழ்நாட்டில் டெங்கு பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனிப்பிரிவு தொடங்கப்பட்டு நோயாளிகள் கவனமுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டெங்குவை கட்டுப்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தாலும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த சிறுவன் சக்தி சரவணன் என்பவன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தான். 

பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த சிறுவன் சக்தி சரவணன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி  எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தான்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சக்தி சரவணனுக்கு ரத்த அணுக்கள் மிகவும் குறைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in