பரபரப்பு... பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!

எல்.கே.அத்வானி
எல்.கே.அத்வானி

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த மாதம் 27-ம் தேதி, உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சிறுநீரகம் மற்றும் முதியோர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்களின் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து மறுநாள் வீட்டிற்கு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று இரவு அத்வானிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி
பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

96 வயதான அத்வானிக்கு தற்போது என்ன மாதிரியான உடல்நலக்குறைவு என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அவர், நரம்பியல் மூத்த மருத்துவர் வினித் சூரியின் கண்காணிப்பில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.கே.அத்வானி
எல்.கே.அத்வானி

இந்த ஆண்டின் துவக்கத்தில் எல்.கே.அத்வானிக்கு, நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். அத்வானியின் உடல்நிலை, வயோதிகத்தை கருத்தில் கொண்டு அவரது இல்லத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in