ஆட்டை வெட்டுவது போல வெட்டுவதாக மிரட்டுகின்றனர்... பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் பகீர் புகார்!

ஏ.பி.முருகானந்தம்
ஏ.பி.முருகானந்தம்

"ஆட்டை வெட்டுவது போல தன்னையும் வெட்ட உள்ளதாக முகநூலில் கொலை மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.முருகானந்தம், "தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அண்ணாமலையை கொச்சைப்படுத்தி பேசுவது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி நடு ரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள். இது பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளனர்.

பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படவில்லை. எனது முகநூல் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டை வெட்டியதைப் போல உன்னையும் கண்ட துன்டமாக வெட்டுவோம் என்று மிரட்டுகின்றனர். இவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் கீழ்த்தரமான அரசியலாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. ஆட்டை வெட்டுவது வேறு, ஆட்டில் அண்ணாமலையை புகைப்படத்தை மாட்டி வெட்டுவது வேறு. நேரடியாக அரசியல் களத்தில் மோதுவதற்கு துப்பு இல்லை. அன்றேக்கே இதை தடுக்கபட்டிருந்தால் இப்படி தொடர்ந்து கொலை மிரட்டல் வந்திருக்காது.

தமிழிசையை கண்டித்த அமித் ஷா
தமிழிசையை கண்டித்த அமித் ஷா

இனி தமிழகத்தில் மிக பெரிய பிரச்சினையை சந்திக்க போகிறார்கள். அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் அமித்ஷா பேசுவது கண்டிப்பு என எப்படி சொல்ல முடியும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம், நமக்கு எப்படி தெரியும்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in