அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி... தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை!

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பீமா கந்து
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பீமா கந்து

அருணாச்சலப் பிரதேசத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அரசு 42 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

60 தொகுதிகள் கொண்ட அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினத்திலேயே 2 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. இந்த தேர்தலில் 10 சட்டப்பேரவை இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 50 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தபால் வாக்குகள் எண்ணும் பணி
தபால் வாக்குகள் எண்ணும் பணி

24 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற ஜூன் 4-ம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஆளும் பாஜக அரசு முன்னிலை பெற்றுள்ளது. 42 தொகுதிகளில் தற்போது பாஜக வேட்பாளர்கள் தபால் வாக்குகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம் வரை தபால் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் எனவும், முடிவுகள் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சியின் பீமா கந்து மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in