தமிழக ஆளுநருக்கு கண்டனம்... உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பாஜக அரசுக்கும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கும் கண்டனம் தெரிவித்து அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக இளைஞரணி கூட்டம்
திமுக இளைஞரணி கூட்டம்

திமுகவின் இளைஞரணி கூட்டம் அமைச்சர் உதயநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவலாயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பாஜக அரசுக்கும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். திமுகவின் கொள்கைகளை விளக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் கூட்டங்கள் போட வேண்டும். இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in