பாஜக நிர்வாகி, முகம் சிதைக்கப்பட்டு வெட்டிக்கொலை; சென்னையில் பரபரப்பு!

பாஜக நிர்வாகி, முகம் சிதைக்கப்பட்டு வெட்டிக்கொலை; சென்னையில் பரபரப்பு!

தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (33) என்பவர் பாஜகவில் பட்டியலின மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மீது 2015-ம் ஆண்டு கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்காக சிறை சென்றவர்.

இந்நிலையில் மேற்கு தாம்பரம் குட்வில் நகரில் உள்ள காலி மனையில், தலையில் வெட்டுக் காயங்களுடன், முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அவர் சடலமாக கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் இரவு சென்ற வாகனங்கள் குறித்தும் ஆட்கள் குறித்த தகவல்களை திரட்டினர்.

வெங்கடேசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அந்த தகராறு காரணமாக கடந்த 9ம் தேதி மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளதால் அவர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்து, தேடி வருகிறார்கள். தாம்பரத்தில் பாஜக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in