பவானி ரேவண்ணாவின் கார் ஓட்டுநர் நள்ளிரவில் கைது... பிரஜ்வல் வழக்கில் பரபரப்பு!

கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் அஜித்.
கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் அஜித்.

ஆபாசடி வீடியோ, பாலியல் பலாத்கார புகாருக்குள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணாவின் கார் ஓட்டுநரை சிறப்பு புலனாய்வு குழு( எஸ்ஐடி) நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா மாநிலம், ஹசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப் பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மதச்சார்பற்ற ஜனதா தள முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

இதனிடையே தலைமறைவான ரேவண்ணா ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவர் தாயகம் திரும்ப ஜேடிஎஸ் கட்சி மற்றும் அவரது குடும்பம் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ‘‘மே 31-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. அதை நிரூப்பிப்பேன் என்று கூறியதோடு குடும்பத்தினரிடமும், மக்களிடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 6 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாயவுக்குழுவக்கு (எஸ்ஐடி) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

பவானி ரேவண்ணா
பவானி ரேவண்ணா

இந்த நிலையில், சிக்கமகளூரு கல்யாண நகரில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணாவின் கார் ஓட்டுநர் அஜித்தை நேற்று நள்ளிரவு எஸ்ஐடி அதிரடியாக கைது செய்துள்ளது. அவரிடம் இவ்வழக்கிற்குத் தேவையான தகவல்களை எஸ்ஐடி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அத்துடன் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் எஸ்ஐடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in