'பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்... மாப்பிளை யார் தெரியுமா?

கண்மணி- அஸ்வத்
கண்மணி- அஸ்வத்

'பாரதி கண்ணம்மா’ சீரியல் புகழ் நடிகை கண்மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. மாப்பிள்ளையும் சின்னத்திரை பிரபலம் என்ற செய்தி ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை கண்மணி. இந்த சீரியலில் இவரது வில்லத்தனமான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதன் பிறகு, இந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

கண்மணி- அஸ்வத்
கண்மணி- அஸ்வத்

அந்த சீரியலிலும் அமுதா, பவானி என்ற இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக தனது திருமண நிச்சயதார்த்த செய்தியை அறிவித்திருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் அஸ்வத் என்பவருடன்தான் கண்மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்திருக்கிறது.

கண்மணி- அஸ்வத்
கண்மணி- அஸ்வத்

வெள்ளை நிற உடையில் இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்தப் புகைப்படத்தை அவர்களது நட்பு வட்டாரம் சமூகவலைதளத்தில் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in