பாலியல் பலாத்கார வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) முன்னாள் எம்.பி- பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

கர்நாடகா மாநிலம், ஹசன் தொகுதி முன்னாள் எம்.பி-யும், ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மக்களவைத் தேர்தல் சமயத்தில் அம்மாநிலத்தில் இந்த விவகாரம் பூதாகரமானது.

பாலியல் பலாத்காரம்
பாலியல் பலாத்காரம்

ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா, பின்னர், தனது தாத்தா தேவகவுடாவின் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த மே 31ம் தேதி மீண்டும் நாடு திரும்பி, சிறப்பு புலனாய்வுக் குழு முன் சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியைத் தழுவினார்.

ஜாமீன் நிராகரிப்பு
ஜாமீன் நிராகரிப்பு

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா உள்ளிட்ட சிலர் மீது பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் மற்றும் மிரட்டல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதி சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்து உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in