இந்த முறையும் அமைச்சர் பதவி இல்லையா? சந்திரபாபு நாயுடு மீது நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்கள் படுகோபம்!

நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா

முதல் முறையாக வெற்றி பெற்ற தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்த சந்திரபாபு நாயுடு, மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. அங்கு மொத்தம் உள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்குதேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதேபோல், மக்களவைத் தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்று அக்கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க முக்கிய பங்கு வகித்துள்ளது. இதேபோல், ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடு

இதையடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார்.

மகன் நாரா லோகேஷீடன், சந்திரபாபு நாயுடு
மகன் நாரா லோகேஷீடன், சந்திரபாபு நாயுடு

மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களில் 14 பேர் புதியவர்கள். இதில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா

ஆனால், முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது மகன் நாரா லோகேஷீக்கு அமைச்சர் பதவியை முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். ஆனால், மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு அமைச்சர் பதவி வழங்காமல் ஓரங்கட்டி விட்டார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

1982-ம் ஆண்டு முதல் தெலுங்கு தேசம் கட்சிக்காக நடிகர் பாலகிருஷ்ணா பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். 2014-ம் ஆண்டு முதன்முறையாக இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்டு பாலகிருஷ்ணா வெற்றி பெற்றார். அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஆனால், முதல் முறையாக வெற்றி பெற்ற பாலகிருஷ்ணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா

அதன் பிறகு அவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்றார், ஆனால் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு அவர் தற்போது 2024-ம் நடைபெற்ற தேர்தலில் பாலகிருஷ்ணா வெற்றி பெற்றுள்ளார், இது தெலுங்கு தேசம் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் இந்த முறையும் பாலகிருஷ்ணாவின் அமைச்சர் கனவு நிறைவேறவில்லை.

இக்கட்டான நேரத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து கட்சியை உருவாக்கிய பாலகிருஷ்ணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என இந்துப்பூரில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் பாலகிருஷ்ணா ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in