
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தோ்தல் கால வாக்குறுதியான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்குதல், மனித வள மேலாண்மைத் துறையின் பணியாளா் விரோத நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகச் சங்கத்தின் சாா்பில், தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் இவை இல்லாமல் மேலும் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா். மேலும் அரசு தங்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மக்களவைத் தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய ஊழியா் சங்கங்களில் ஒன்றான தலைமைச் செயலகச் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.