மேற்கு வங்கத்தில் ஆச்சரியம்... திரிணமூல் காங்கிரஸை பின்தள்ளி பாஜக அசுரப் பாய்ச்சல்; பரிதாபத்தில் காங்கிரஸ்

பிரதமர் மோடி - முதல்வர் மம்தா பானர்ஜி
பிரதமர் மோடி - முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விட, பாஜகவுக்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசம்(80), மகாராஷ்டிரா(48) மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களை மக்களவைக்கு அனுப்பும் மாநிலமாக மேற்கு வங்கம்(42) திகழ்கிறது. அதிலும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கே நடைபெறுகிறது. எனவே மேற்கு வங்கத்தில் தனக்கான வெற்றியை பெரும் சவாலாக பாஜக எதிர்கொண்டு களமிறங்கியது.

மேற்கு வங்க மாநிலம் புருலியா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் புருலியா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

கிட்டத்தட்ட அதில் வெற்றி கிடைத்திருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணமூல் கட்சியை விட கணிசமான இடங்களை அதிகம் பெற்று, பாஜக முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிகின்றன.

கடந்த 2019 தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றிருந்தது; பாஜக 18 இடங்களில் வென்றிருந்தது. நடப்பு தேர்தலில் பாஜகவுக்கு 22 இடங்களும், திரிணமூலுக்கு 19 இடங்களும் கிடைக்கும் என என்டிடிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் மேற்கு வங்கத்தின் தனிப்பெரும் கட்சியாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விஞ்சி பாஜக முன்னிலை இடம் பிடிக்க வாய்ப்பாகி உள்ளது.

இதுவே ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 21 - 26 இடங்களும், திரிணமூலுக்கு 16 - 18 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. இந்தியா நியூஸ் டி-டைனமிக்ஸ் கருத்துக்கணிக்கு பாஜகவுக்கு 21, திரிணமூலுகு 19 என்கின்றன. ரிபப்ளிக் பாரத்-மேட்ரைஸ் கணிப்புகள் பாஜகவுக்கு 21 - 25 இடங்களும், திரிணமூலுக்கு 16 - 20 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

சந்தேஷ்காலி பெண்கள் போராட்டம்
சந்தேஷ்காலி பெண்கள் போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள், பரிதாபத்துக்கு உரிய வகையில் 0 - 2 இடங்களில் வெற்றி வாய்ப்புகளை வழங்கியுள்ளன. பாஜகவின் இந்த மகத்தான வெற்றி வாய்ப்புகளின் பின்னணியில், மத்திய விசாரணை அமைப்புகளின் பாய்ச்சல், சந்தேஷ்காலி விவகாரதில் திரிணமூல் கட்சியின் பெயர் கெட்டது, மேற்கு வங்கத்தில் இந்துத்துவா எழுச்சி, மோடியின் செல்வாக்கு உள்ளிட்டவை காரணமாக கற்பிக்கப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in