நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள்... நீலகிரியில் நக்சல்கள் பதுங்கலா என தீவிர விசாரணை!

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் எழுதப்பட்டுள்ள நீட் எதிர்ப்பு வாசகங்கள்
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் எழுதப்பட்டுள்ள நீட் எதிர்ப்பு வாசகங்கள்
Updated on
1 min read

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில், இந்தியாவிற்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் வாசகங்கள் சாலையோர தடுப்புகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் முக்கிய பாதைகளில் ஒன்றாக கோத்தகிரி சாலை இருந்து வருகிறது. இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கோத்தகிரி மற்றும் உதகைக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாதையின் சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரில் ’இந்தியா ஒழிக’ என்ற வாசகங்கள் கருப்பு மையால் எழுதி வைக்கப்பட்டு இருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மலைப்பாதையில் கருப்பு மையால் வாசகங்களை எழுதியவர்கள் குறித்து தீவிர விசாரணை
மலைப்பாதையில் கருப்பு மையால் வாசகங்களை எழுதியவர்கள் குறித்து தீவிர விசாரணை

உடனடியாக போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பார்த்தபோது, ’இந்தியா ஒழிக’, ’இந்தியா இம்போஸ் நீட்’, ’இந்தியாவில் இருந்து வெளியேறும் தமிழகம்’ என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருப்பு மையால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாசகங்களை போலீஸார் சுண்ணாம்பு பூசி அழித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. எனவே கேரளாவில் அதிகரித்துள்ள நக்சல் இயக்கத்தினர், நீலகிரிக்கு வருகை தந்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம நபர்கள் இந்த காரியத்தில் ஈடுபட்டார்களா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வாசகங்கள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in