கோவை தொகுதியில் மண்ணைக் கவ்வும் அண்ணாமலை... வெளியான கருத்துக்கணிப்பால் பாஜக அதிர்ச்சி!

அண்ணாமலை
அண்ணாமலை

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைவார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தது. 57 தொகுதிகளுக்கு ஏழாம் கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் வாக்காளர்களுக்கு அதிகரித்தது.

எக்சிட் ஃபோல்
எக்சிட் ஃபோல்

இந்த நிலையில், கோயம்புத்தூர் மக்களவையில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியடைய வாய்ப்பு உள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பி.கணபதி ராஜ்குமார் அமோக வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, , "ஜூன் 4 அன்று உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்புகிறோம். நாங்கள் அமோகமாக வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்பது தான்" என்று கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று அக்கட்சியினர் கூறி வரும் நிலையில், அதற்கு எதிராக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளதால், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in