ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி திருமலையில் குடும்பத்தினருடன் வழிபட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு
திருப்பதி திருமலையில் குடும்பத்தினருடன் வழிபட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன், திருப்பதி ஏழுமலையானை இன்று தரிசித்து வழிபட்டார்.

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, 4வது முறையாக அம்மாநில முதல்வராக நேற்று பதவி ஏற்றார்.

அவருடன், ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உள்பட 25 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

திருமலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு
திருமலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்று சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஆந்திர முதல்வராகியுள்ள சந்திரபாபு நாயுடு, தனது குடும்பத்தினருடன் இன்று திருப்பதி திருமலைக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வழிபட்டார். அவருடன் அவரது மகனும், அமைச்சருமான நாரா லோகேஷும் உடனிருந்தார்.

முன்னதாக திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம், அர்ச்சகர்கள் சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்குப் பின்னர் அவர்களுக்கு புனித தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழிபாடு

திருப்பதி சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதிக்கு சென்று இன்று மாலை 4.14 மணிக்கு முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

இதில், ஆசிரியர்கள் நியமனம், நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்தல், நலத்திட்ட ஓய்வூதியத்தை மாதம் ரூ.4,000 ஆக உயர்த்துதல் போன்ற பல்வேறு கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in