உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.
தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று காலை தாயகம் வந்தடைந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னப்பிரிக்கா அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

வெற்றிக்கோப்பையுடன் இந்திய அணி
வெற்றிக்கோப்பையுடன் இந்திய அணி

இந்த நிலையில் இந்திய அணி தாயகம் திரும்பும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், பார்படாஸில் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கனமழையுடன் சூறாவளி காற்று வீசியதால் விமான சேவை முடங்கியது.

இதனால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இறுதிப்போட்டி நடைபெற்று நான்கு நாட்களுக்குப் பின் இந்திய அணி வீரர்கள் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

ரசிகர்களைப் பார்த்து கையசைக்கும் விராட் கோலி.
ரசிகர்களைப் பார்த்து கையசைக்கும் விராட் கோலி.

தனிவிமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் இந்தியா, இந்தியா” என முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து வீரர்கள் தங்க உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலிலும் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக டி20 உலகக் கோப்பை வடிவில் கேக் செய்யப்பட்டு, அதில் இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in