விநாயகர் ஊர்வலத்தில் தகராறு… இளைஞரை கல்லால் அடித்து கொல்ல முயற்சி!

விநாயகர் ஊர்வலத்தில் தகராறு… இளைஞரை கல்லால் அடித்து கொல்ல முயற்சி!

செங்கல்பட்டு அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறிய இளைஞரை செங்கல்லால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில், மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் பஜனை கோயில் அருகே வந்த போது இளைஞர்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது வீட்டின் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது என கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் 10 பேர் கார்த்திக்கை செங்கல்லால் சரமாரியாக தாக்கினர்.

அங்கிருந்த பொதுமக்கள் இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த கார்த்திக் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மறைமலைநகர் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கார்த்திக்கை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த ராகேஷ், சுரேஷ், நவீன் உள்ளிட்ட இளைஞர்கள் என தெரியவந்தது.

அவர்களுக்கும், கார்த்திக்கும் இடையே கடந்த வருடம் பேனர் கிழித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. எனவே தற்போது அதனை பழிதீர்க்கும் விதமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குல் நடத்தி விட்டு தலைமறைவாக உள்ள இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in