திருமூர்த்தி அணை திறப்பு; பாலாறு படுகை விவசாயிகள் வரவேற்பு!

திருமூர்த்தி அணை திறப்பு; பாலாறு படுகை விவசாயிகள் வரவேற்பு!

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிக்கு உட்பட்ட 94,068 ஏக்கர் நிலங்களில் நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், குடிநீர் தேவைக்காகவும் ஒரு சுற்றுக்கு மொத்தம் 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். வரும் அக்.11ம் தேதி வரை 21 நாட்களுக்கு, ஒரு சுற்றுக்கு மொத்தம் 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறந்து விடப்படும் என்பதால் பாலாறு படுகை விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in