உ.பியில் எதிர்கட்சியினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்... அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வீட்டுக் காவல்
வீட்டுக் காவல்

உத்தரப்பிரதேசத்தில் எதிர்கட்சியினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர். அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உத்தரப்பிரதேசத்தில் எதிர்கட்சியினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து எதிர்க்கட்சித் தொண்டர்களை அவர்களது வீடுகளுக்குள் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க விடாமல் தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, உத்தரபிரதேச, காவல்துறைத் தலைவர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உத்தப்ரபிரதேசத்தின் பல மாவட்டங்களில், மிர்சாபூர் தவிர, அலிகார், கன்னோஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகம் எதிர்கட்சியின் அரசியல் ஊழியர்களை சட்ட விரோதமாக வீட்டுக்காவலில் வைக்கின்றன, இதனால் அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.

"அனைத்து அரசியல் கட்சிகளும் அமைதியாகச் செயல்படும் போது, ​​பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டும் நெறிமுறைக்கு புறம்பான செயல்களில் இருந்து நிர்வாகம் விலகி இருக்க வேண்டும். பக்கச்சார்பான மாவட்ட நீதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நீக்கப்பட்டு, அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்." என்று அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in