அதிர்ச்சி... ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியது!

ஏர்டெல்
ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, ஏர்டெல்லும் தனது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக ஆரோக்கியமான வணிக மாதிரியை செயல்படுத்த, ஒரு பயனருக்கு மொபைல் சராசரி வருவாய் (ஏஆர்பியு) ரூ.300 க்கு மேல் இருக்க வேண்டும் என்பதை பார்தி ஏர்டெல் பராமரித்து வருவதாக ஏர்டெல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ஏர்டெல் தனது மொபைல் கட்டணங்களை 2024 ஜூலை 3 முதல் மாற்றி அமைக்க உள்ளது. பட்ஜெட் சவாலான நுகர்வோர் மீதான எந்தச் சுமையையும் நீக்கும் வகையில், நுழைவு நிலை திட்டங்களில் மிகக் குறைந்த விலை உயர்வு (ஒரு நாளைக்கு 70 பைசாவுக்கும் குறைவாக) இருப்பதை உறுதி செய்துள்ளோம்.” என பார்தி ஏர்டெல் ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

புதிய கட்டணங்களாக, அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்களில், ரூ.179 ரீசார்ஜ் திட்டம் ரூ.199 ஆகவும், ரூ.455 திட்டம், ரூ.599 ஆகவும், ரூ.1,799 திட்டம் ரூ.1,999 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ஏர்டெல், ஜியோ
ஏர்டெல், ஜியோ

ஒரு பயனருக்கான சராசரி வருவாயை பெருக்குவது, 5G ஸ்பெக்ட்ரமில் முதலீடுகளை ஆதரிப்பது மற்றும் மூலதனத்தில் எளிய வருவாயைப் பெறுவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிரிவுகளில் உள்ள அனைத்து மொபைல் திட்டங்களுக்கும் 12 முதல் 25 சதவீத கட்டண உயர்வை நேற்று அறிவித்தது. இந்நிலையில் ஏர்டெல்லும் தனது ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது அவற்றின் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in