தமிழக ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு 58 ஆக உயர்வு! அரசாணை வெளியீடு!

தமிழக ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு 58 ஆக உயர்வு! அரசாணை வெளியீடு!

தமிழக ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு 58 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும், தேர்தலில் அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசுப் பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் எனவும், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவு செய்வதற்கான வேலைப்பாடுகள் செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு பொது பிரிவினருக்கு 45 ஆக இருந்த நிலையில் தற்போது 53 ஆகவும், இதர பிரிவினருக்கு வயது வரம்பு 50 ஆக இருந்த நிலையில் தற்போது 58 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in