பரபரப்பு… விஜய் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி!

பரபரப்பு… விஜய் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி!

கடைசி வரை ‘லியோ’ படத்தை விட பெரிய ட்விஸ்ட்டாக தமிழகத்தின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ‘லியோ’ ரிலீஸாகுமா என்கிற எதிர்பார்ப்பு நேற்று மாலை வரை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், ஏற்கெனவே ரசிகர்களால் இருக்கைகள் உடைத்து, துவம்சம் செய்யப்பட்ட சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று இரவு டிக்கெட் வாங்கும் போது தள்ளு முள்ளு ஏற்பட்டதை அடுத்து ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி மறுத்ததை அடுத்து, 9 மணி முதல் படம் திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

முன்னதாக, தங்களது திரையரங்களில் லியோ வெளியாகாது என்று ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் இடையே பங்குகள் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால்தான் ’லியோ’ வெளியாகப்போவதில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், ரோகிணியில் ’லியோ’ படத்தை திரையிடுவது தொடர்பான பிரச்சினைக்கு நேற்று மாலை தீர்வு காணப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்க குவிந்தனர். அப்போது ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். ரோகிணி திரையரங்கில் ’லியோ’ பட டிரெய்லர் வெளியீட்டின்போது குவிந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கின் நாற்காலிகளைச் சேதப்படுத்தினர். உடைக்கப்பட்ட 450 இருக்கைகளும், 10 நாட்களில் சுமார் ரூ.30 லட்சம் செல்வில் மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in