டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அதிர்ச்சி தோல்வி!

நியூசிலாந்து அணியை திணறடித்த ஆப்கானிஸ்தான் அணி
நியூசிலாந்து அணியை திணறடித்த ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில், நியூசிலாந்து அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் ’சி’ பிரிவில் இன்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கடந்த முறை இறுதிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என பெரும்பாலானோரும் கணித்திருந்தனர். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணித் தலைவர்கள்
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணித் தலைவர்கள்

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்ல குர்பாஸ் 80 ரன்களை எடுத்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதே போல் இப்ராஹிம் சத்ரான் 44 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த உமர் சாய் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 20 முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி சார்பில் ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தின் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலம் ரன் எதுவும் எடுக்காமல், முதல் பந்திலேயே ஃப்ரூகி பந்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறத் துவங்கினர். அதிகபட்சமாக அந்த அணியில் பிலிப்ஸ் 18 ரன்களும், மேட்ச் ஹென்றி 12 ரன்கள் மட்டும் எடுத்தனர். பிற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் அந்த அணி 15.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. குறிப்பாக இன்றைய போட்டியில் ஃபரூகி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, இருவரும் தலா 4 விக்கெட்டுகளை அள்ளினர். முகமது நபி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக குர்பாஸ் தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்து அணியின் இந்த தோல்வி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in