மாஸ் காட்டும் ஆப்கானிஸ்தான்… இலங்கையை வீழ்த்தி 3-வது வெற்றி!

மாஸ் காட்டும் ஆப்கானிஸ்தான்… இலங்கையை வீழ்த்தி 3-வது வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்தது.

உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் என பலம் வாய்ந்த அணிகள் தடுமாற ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், நெதர்லாந்து 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். கேப்டன் குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா ஆகியோர் கணிசமான பங்களிப்பை வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர் தீக்சனா 31 பந்துகளில் 29 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால் மற்ற வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சர்தான், ரஹ்தம் ஷா ஆகிய இருவரின் சீராக ரன் சேர்த்தனர். சர்தான் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹ்மத் ஷா 62 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர்களை தொடர்ந்து ஷாகிதி, ஓமர்சாய் ஆகிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

ஷாகிதி 58 ரன்களுடனும், ஓமர்சாய் 73 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் போட்டியை முடித்து வைத்தனர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 242 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கன் வீரர் பரூக்கி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த போட்டி ரஷித் கானின் 100-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in