மனிஷா கொய்ராலா முதல் மம்தா மோகன்தாஸ் வரை... புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகைகள்!

மனிஷா கொய்ராலா முதல் மம்தா மோகன்தாஸ் வரை... புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகைகள்!

புற்றுநோய் பாதிப்பு அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றுதான். ஆனால், இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்தால் அதில் இருந்து மீண்டு வர முடியும். அப்படி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நடிகைகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

1. மனிஷா கொய்ராலா:

’இந்தியன்’, ‘முதல்வன்’ போன்ற பல ஹிட் படங்கள் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சியமானவர் நடிகை மனிஷா. தற்போது பாலிவுட்டில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மனிஷா.

வெளிநாட்டிற்கு சென்று இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஒரு வருட கால போராட்டத்திற்குப் பிறகு இதில் இருந்து மீண்டு வந்தார். புற்றுநோய் பற்றியும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

2. மம்தா மோகன்தாஸ்:

’சிவப்பதிகாரம்’ படப்புகழ் நடிகை, பாடகி மம்தா மோகன்தாஸ் ஹாட்ஜ்கின் லிம்போமா கேன்சரால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டார். ஆனால், தற்போது விட்டிலிகோ என்ற நிறக்குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

3. கெளதமி:

நடிகை கெளதமி
நடிகை கெளதமி

நடிகை கெளதமி தனது 35வது வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சென்னையிலும் அமெரிக்காவிலும் புற்றுநோய்க்காக தொடர் சிகிச்சை பெற்று அதில் இருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்தார் கெளதமி. மார்பகப் புற்றுநோய் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

4. ஹினா கான்: 

36 வயதாகும் நடிகை ஹினா கான் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக நேற்று அறிவித்து அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறார். மூன்றாவது கட்டத்தில் தான் இருப்பதாகவும் சிகிச்சை எடுத்து தேறி வருவதாகவும் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். அவர் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in