“இனி இந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்…” நடிகை த்ரிஷா அதிரடி அறிவிப்பு!

“இனி இந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்…” நடிகை த்ரிஷா அதிரடி அறிவிப்பு!

பிரபல நடிகர் குறித்து நடிகை த்ரிஷா வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா அண்மையில் விஜய் உடன் லியோ படத்தில் நடித்திருந்தார். அவருடன் மடோனா, அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைப்பதில்லை என்றும், லியோ படத்தில் வில்லன் கேரக்டரில் ஹீரோயின் உடன் இருக்கும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.

அவர் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், மன்சூர் அலிகான் பேச்சு குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்றை பார்த்தேன். அதனை வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், அவமரியாதையாகவும், வெறுக்கத்தக்க வகையிலும், பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார்.

அவர் என்னுடன் திரையில் இணைந்து நடிக்க விரும்பலாம். ஆனால், இதுவரை இது போன்றதொரு நபருடன் நான் நடிக்கவில்லை என்பது ஆறுதல். இனி வரும் நாட்களிலும் எனது திரை வாழ்க்கையில் நான் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்சூர் அலிகானின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in