ரூ. 7 கோடிக்கு வீட்டை அடமானம் வைத்த நடிகை தமன்னா?!

தமன்னா
தமன்னா

நடிகை தமன்னா மும்பையில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றை சுமார் ரூ. 7 கோடிக்கு அடகு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கோலிவுட், டோலிவுட் என வலம் வந்த நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘ஜெயிலர்’, ‘அரண்மனை4’ என தமிழிலும் இவரது அடுத்தடுத்தப் படங்கள் வெற்றிப் பெற்று இவர் மீது கவனம் குவித்தது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இவர் காதலில் விழுந்தார்.

தமன்னா
தமன்னா

சீக்கிரம் இந்த ஜோடி திருமண செய்தியை அறிவிக்கும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், தமன்னா தனது வீட்டை அடமானம் வைத்திருப்பதாக அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

தமன்னா
தமன்னா

அதாவது, தமன்னாவுக்கு மும்பையில் மூன்று அப்பார்ட்மெண்ட் சொந்தமாக இருக்கிறது. அதில் ஒன்றைதான் ரூ. 7 கோடிக்கு அடமானம் வைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாது, தனியார் நிறுவனத்திடமிருந்து வணிக வளாகம் ஒன்றை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறார். இதற்காக, ரூ. 72 லட்சம் முன் பணம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in